Thursday, April 23

தாயிலிருந்து சேய்க்கு


கர்ப்ப காலம் என்பது ஒரு பெண்ணுக்கு எத்தனை மகிழ்வான நேரம் .தாயின் பெருமைகளைப் பேசியும் பாடியும் பூரித்துப் போகிறோம்.



நோயுள்ள தாயின் கருவில் இருக்கும் குழந்தைக்கும் எச்.ஐ.வி பரவ வாய்ப்பு இருக்கிறது ....
உண்மை தான் .


பல நேரங்களில் ,கர்ப்ப கால மருத்துவ சோதனைகளினாலேயே ,இந்த நோய் இருப்பது கண்டறியப்படுகிறது .கர்ப்பத்திலிருக்கும் தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவ 15- 35 % வரை வாய்ப்பிருக்கிறது .


எந்தெந்த காலங்களில் இந்த நோய் பரவுகிறது என்பதை மூன்றாக பிரிக்கலாம்.
1.கர்ப்ப காலத்தில் -5-10%
2.பிரசவத்தின் போது -10-20%
3.தாய்ப்பால் கொடுக்கும் போது -5-10%


இந்த புள்ளி விவரங்கள் பலருக்கு அச்சமூட்டுபவையாக இருக்கின்றன .இதனால் நோய் பாதித்தவர்கள் குழந்தையே பெற்றுக் கொள்ளக் கூடாது என்ற கருத்தும் சிலரிடையே நிலவுகிறது .குழந்தைக்கு தாயிடமிருந்து நோய் பரவாமல் தடுக்க முடியுமா என்றால், கண்டிப்பாக முடியும் .சரியான சிகிச்சை மூலம் குழந்தைக்கு நோய் பரவுவதை <1% வரை குறைக்க முடியும் .

3 comments:

ரசிகன் said...

கொஞ்சம் அதிசயமாக தான் இருக்கிறது. ஆண்களும் தொட அஞ்சும் விஷயத்தை அற்புதமாக எடுத்தாண்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

நானும் எயிட்சை லேசாக தொட்டுள்ளேன். வாய்ப்பிருந்தால் படித்து விட்டு விமரிசியுங்கள்.
http://vaazhveperaanantham.blogspot.com/2011/10/blog-post_30.html

ரசிகன் said...

டாக்டரா நீங்க!!!! அதான் தெளிவா எழுதி இருக்கீங்க.

பூங்குழலி said...

நீண்ட நேரம் செலவிட்டு என் பதிவுகளை படித்ததற்கு நன்றி ரசிகன் ...நான் சில வருடங்களாகவே எச் ஐ வி யினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான சிறப்பு மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறேன் ...உங்கள் பதிவினை அவசியம் படிக்கிறேன் ..மீண்டும் என் நன்றிகள்

Post a Comment