Monday, May 27

Post exposure prophylaxis

மக்கள் மத்தியில் மட்டுமல்ல மருத்துவர்கள் மத்தியிலும் அஞ்சப்படும் நோயாக இன்றளவும் எச்ஐவி இருக்கிறது .மருந்துகள் பல வந்துவிட்டாலும் பால்வினை நோய் என்று பரவலாக அறியப்படுவதால் இந்த பயம் .

போஸ்ட் எக்ஸ்போஷர் ப்ரோபிலாக்சிஸ் (post exposure prophylaxis -PEP  )என்பது என்ன?
எச்ஐவி தொற்று வரும் அபாயம் இருக்கும் நிகழ்வுகளுக்கு பின் அது பரவாமல் தடுக்க எடுக்கப்படும் சிகிச்சையே PEP  எனப்படும் .இந்த நிகழ்வுகள் (exposures ) பல வகையாக இருக்கலாம் .

1.எச்ஐவி உள்ள நோயாளிக்கு ஊசி போடும் போதோ இல்லை மருந்துகளை செலுத்தும் போதோ  அதே ஊசியால் மருந்தை செலுத்துபவர்களுக்கோ அல்லது அந்த ஊசியை கையாள்பவருக்கோ ஏற்படும் காயங்கள் (needle  prick injuries ).

2.எச்ஐவி தொற்று உள்ளவருடன் அதை குறித்து அறிந்தோ அறியாமலோ பாதுகாப்பற்ற உடலுறுவு கொள்வது  

3.எச்ஐவி உள்ளவருடன் உடல் உறவின் போது ஆணுறை கிழிவது

4.பாலியல் வன்முறைகள் தொடர்ந்து

PEP க்கு தரப்படும் மருந்துகள் எச்ஐவி சிகிச்சைக்கு தரப்படும்  மருந்துகளே .இவற்றை இந்த நிகழ்வுகள் நடந்து  அதிக பட்சமாக 72 மணி நேரத்திற்குள் ஆரம்பிக்க வேண்டும் .தொடர்ந்து 28 நாட்கள் எடுத்து கொள்ள வேண்டும் .இதற்கு முன்னர் எச்ஐவி பரிசோதனை செய்துகொள்வது அவசியம் .

விழிப்புணர்வும் சரியான சிகிச்சையும் மட்டுமே  எச்ஐவி பரவுவதை தடுக்க முடியும் .