Wednesday, January 20

தடுப்பூசி

தடுப்பூசி போன்றதொரு  சாதாரண நிகழ்வுக்கு பெரும் போராளி போன்ற வாழ்த்துகளை பெறுவது கூச்சமாக இருக்கிறது -நிஜத்தில் .இந்த அரசு  தனது அறிவியில் பிறழ் நிலையினால் உயிர் அச்சுறுத்தும்  ஒரு நோயே தடுப்பூசியை விட பரவாயில்லை என்ற நிலைக்கு மக்களை தள்ளிவிட்டிருக்கிறது.

நான் இன்று serum institute  தயாரிக்கும் Covishield -கோவிஷீல்டு தடுப்பூசியை போட்டுக் கொண்டேன் .சரி ஏன் Covishield ?


இந்திய அரசு இரண்டு தடுப்பூசிகளை பயன்பாட்டிற்கு அங்கீகரித்திருக்கிறது .ஒன்று Bharath Biotech நிறுவனத்தின் Covaxin -கோவாக்சீன் .இரண்டாவது  Covishield .

1.இரண்டுமே பாதுகாப்பானவை -அதற்கான தரவுகள் இருக்கின்றன .

2. Covaxin குறித்த சர்ச்சைகள் -அதன் ஆராய்ச்சிகள் இன்னமும் முடிவடையாமல் அது மருத்துவ ஆராய்ச்சியாக பயன்பாட்டிற்கு வந்தது தான் .

3.அதுவும் இன்னமும் பல தடுப்பூசிகள் உலகமெங்கும்  பயன்பாட்டிற்கு வந்திருக்கும் நேரத்தில் ,இந்த அவசரம் தேவை இல்லாதது .

4.Covaxin  பிறவற்றை விட வெகு சிறந்ததொரு வலுவான தடுப்பூசியாக இருக்கக்கூடும் .ஆனால் அதற்கான தரவுகள் இன்று இல்லை என்பது தான் உண்மை .

தடுப்பூசி போட அச்சப்பட  வேண்டுமா என்பவர்களுக்கு -இல்லை என்பதே நேர்மையான பதில் .உங்களுக்கு எது சிறந்ததாக இருக்கும் என்பதை உங்கள் மருத்துவரை கலந்து ஆலோசனை செய்து தேர்வு செய்து கொள்ளுங்கள் .