Thursday, September 10

ஹிஸ்டரெக்டமி (Hysterectomy)

கருப்பை அகற்றும் சிகிச்சை ஹிஸ்டரெக்டமி எனப்படுகிறது .பொதுவாக என்ன காரணங்களுக்காக செய்யப்படுகிறது என்று பார்த்தால் ,

1.மாதவிடாய் சம்பந்தமான தொந்தரவுகளுக்காக
2.அடியிறங்குதல்
3.கருப்பையில் கட்டி
4.நாள்பட்ட வெள்ளைப் போக்கு
5.கருப்பை புற்று நோய்கள்

இதில் அடியிறங்குதலிலும்,புற்று நோய்களிலும் மாற்று சிகிச்சை வேறு இல்லை என்றே சொல்லலாம் .


மாதவிடாய் சம்பந்தமான தொந்தரவுகள் :


இதில் பலவற்றிற்கு இப்போது அறுவை சிகிச்சையற்ற எளிய சிகிச்சை முறைகள் பல வந்துவிட்டன .குறிப்பாக ஹார்மோன் மாத்திரைகள் ,ஹார்மோன் லூப்புகள்(Hormone releasing IUCDs) ,அப்லேஷன்(Endometrial Ablation ) ,ஹிஸ்டரோஸ்கோபி (Hysteroscopy)மூலம் சிகிச்சைகள் என .இவற்றின் மூலம் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் .இவற்றின் மூலம் தீர்வு காணமுடியாத பட்சத்தில் அறுவை சிகிச்சை தேவைப்படலாம் .

கருப்பை கட்டிகள் :

இந்த கட்டிகளைக் கூட ஹிஸ்டராஸ்கோபி மூலம் அகற்ற முடியும் .இவற்றைக் கரைக்கவும் மருந்துகள் உண்டு .இவற்றினால் வேறு ஏதும் தொந்தரவுகள் இல்லை என்ற பட்சத்தில் இவற்றை அகற்ற வேண்டிய தேவையே இல்லை

வெள்ளைப் போக்கு :

இதற்கு காரணமான கிருமிகளைக் கண்டறிந்து சரியாக சிகிச்சை செய்தாலே போதுமானது .கருப்பை வாய் புற்று நோய் காரணமாக இந்த வெள்ளைப் போக்கு என்றால் நோயின் நிலைக்கு ஏற்ப கருப்பை அகற்ற வேண்டியது அவசியமாகலாம் .

ஏன் அதிகமாக கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன ?

1.இதை பற்றிய தெளிவான தகவல்களை பலரும் அறியாதிருப்பதால் 2.பெண்களும் ,குடும்பத்தினரும் இதை ஒரு நிரந்தர தீர்வாக கருதுவதால் (வேறு என்ன சிகிச்சை செய்தாலும் ,அறுவை சிகிச்சை பின்னர் தேவைப்படலாம் .அதற்கு இப்போதே செய்து விடலாம் )
3.பெண்கள் கருப்பை என்பது குழந்தைகள் சுமக்க மட்டுமே என்று எண்ணுவதால் .
4.மாதவிடாயிலிருந்து விடுதலைக் கிடைக்கும் என்று சில பெண்கள் கருதுவதால்

ஆனால் கருப்பையை எடுப்பதால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் பற்றி பலருக்கும் தெரியவில்லை .
1.கருப்பை எடுப்பதால் கருமுட்டை பைகளும் சில வருடங்களில் (மூன்று முதல் ஐந்து வருடங்களுக்குள் )செயலிழக்கின்றன .இதனால் பெண்களுக்கு இருதய சம்பந்தமான நோய்களுக்கு எதிரான பாதுகாப்பு குறைகிறது .
2.சில பெண்கள் ,தங்கள் பெண்மை குறைந்து விட்டதாக பயந்து மன நோய்க்கு ஆளாகின்றனர் .
3.எலும்பு தேய்மானம் அதிகரிக்கின்றது .

இவை சில மட்டுமே .அறுவை சிகிச்சைக்கு முடிவு செய்யும் முன்னர் .மருத்துவருடன் நன்றாக ஆலோசனை செய்து முடிவு எடுப்பது நல்லது.

19 comments:

www.bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Radhakrishnan said...

பெரும்பாலான விசயங்களில் கருப்பையை நமது ஊரில் அகற்றி விடுகிறார்கள். நல்ல பதிவு.

பூங்குழலி said...

உண்மை தான் .கருத்தரித்தல் தவிர இதற்கு வேறு பணியில்லை என்ற நினைப்பாலும் கருப்பையை அகற்றி விட்டால் மாதவிடாயிலிருந்து தப்பித்து கொள்ளலாம் என்ற நினைப்பாலும் இது சாத்தியமாகிறது

Kanchana Radhakrishnan said...

நல்ல பதிவு.

பூங்குழலி said...

நன்றி காஞ்சனா

எண்ணங்கள் 13189034291840215795 said...

ரொம்ப உபயோகமான பதிவு ..( எப்படி மிஸ் செய்தேன்.?...)

பூங்குழலி said...

நன்றி சாந்தி ,நானே இந்த தளம் பக்கம் வந்து வெகு நாட்கள் ஆகிவிட்டது .சீக்கிரத்தில் வேறு பதிவு எழுத வேண்டும் .

raji said...

தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்


http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_19.html

M.R said...

அருமையான தகவல் ,பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி சகோ....

பூங்குழலி said...

உங்கள் அறிமுகத்திற்கு நன்றி ராஜி

பூங்குழலி said...

நன்றி எம் ஆர்

மாலதி said...

ஹிஸ்டராஸ்கோபி மூலம் அகற்றமுற்படும்போது இதன் கதிர்வீச்சின் தாக்கம் பிவிளைவை தரதா சகோதரி ? சிறப்பான இடுகை பாராட்டுகள் .

பூங்குழலி said...

இதன் கதிர்வீச்சு தாக்கங்கள் ஏதும் பாதிப்பு ஏற்படுத்தாது .வருகைக்கு நன்றி சகோதரி

Anonymous said...

அறிந்துக் கொள்ள வேண்டிய அவசிய தகவல். கருப்பையை ஏன் எடுக்கவேண்டும் என நம்மவர்களின் ஆதரவான / முரணான அறியாமையிலான எண்ண ஓட்டங்களை அற்புதமாக தந்துள்ளீர். தங்கள் கட்டுரை படித்தபின்பே பல விஷயங்கள் எனக்கு புரிந்தது. தொடர்ந்து இது போன்ற பதிவுகளை படைத்து விழிப்புணர்வை உண்டாக்குக. நன்றி! - நெல்லி. மூர்த்தி

பூங்குழலி said...

நிச்சயம் தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன் nellimoorthy.இருபது ,முப்பது வயதுகளில் கருப்பை அகற்றப்பட்டு பின்னர் சிரமப்படும் பெண்களை பார்த்தால் வருத்தமாக இருக்கிறது

அன்னை சரோஜா பவுண்டேசன் said...

arumai

பூங்குழலி said...

ரொம்ப நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_20.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Post a Comment